/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஸ் - பைக் மோதல் இளைஞர் படுகாயம்
/
பஸ் - பைக் மோதல் இளைஞர் படுகாயம்
ADDED : செப் 17, 2025 09:36 PM
ஆர்.கே.பேட்டை:பேருந்தின் பின்புறம் பைக் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயமடைந்தார்.
ஆர்.கே.பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டையைச் சேர்ந்தவர் ருத்ரன், 20. இவர், ஆர்.கே.பேட்டையில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து கொண்டே பணிபுரிந்து வருகிறார். நேற்று அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து பைக்கில், ஆர்.கே.பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
நரசிம்மபேட்டை அருகே வந்த போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது மோதினார். இதில், படுகாயமடைந்த ருத்ரன், சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக, ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.