நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால், வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 38. பன்றி பண்ணை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி சோனியா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி மனைவியிடம் மேலும் மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். மனைவி பணம் தர மறுத்ததால் மின்விசிறியில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.