/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
குடிநீர் வராததால் பெண்கள் காலி குடங்களுடன் மறியல்
/
குடிநீர் வராததால் பெண்கள் காலி குடங்களுடன் மறியல்
ADDED : ஜூலை 14, 2011 12:12 AM
மன்னார்குடி: நீடாமங்கலம் தாலுகா செருமங்கலம் பஞ்சாயத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராத காரணத்தால் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர் இதனால் தஞ்சை, மன்னை சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செருமங்கலம் பஞ்சாயத்து தலைவர் போஸ். இந்த பஞ்சாயத்தில் பணிபுரியும் ஆப்ரேட்டர்களுக்கு பல மாதமாக சம்பளம் கொடுக்கவில்லை. மேலும் மின் மோட்டார் பழுதடைந்த காரணத்தால் மின் மோட்டார் இயக்குவது இல்லை. இதனால் தொடர்ந்து 20 நாட்களாக குழாய்களில் குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி தாசில்தார் சுகுமாறன், போலீஸ் எஸ்.ஐ., சோமசுந்தரம் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தாசில்தார் சுகுமாறன், 'பொது மக்களிடம் நாளை முதல் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும்' என உறுதியளித்ததின் பேரில் மறியல் பேராட்டத்தை கைவிட்டனர்.

