/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
' சூடு, சொரணை இருந்தால் கவர்னர் ராஜினாமா செய்யட்டும் ' திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
/
' சூடு, சொரணை இருந்தால் கவர்னர் ராஜினாமா செய்யட்டும் ' திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
' சூடு, சொரணை இருந்தால் கவர்னர் ராஜினாமா செய்யட்டும் ' திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
' சூடு, சொரணை இருந்தால் கவர்னர் ராஜினாமா செய்யட்டும் ' திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ADDED : மார் 24, 2024 01:47 AM

திருவாரூர்:திருவாரூர் அருகே கொரடாச்சேரி அடுத்த ஊர்குடியில், தஞ்சாவூர் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் முரசொலி, நாகை லோக்சபா தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் ஆகியோரை அறிமுகப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
லோக்சபா தேர்தலை பா.ஜ., ஆட்சியை வீழ்த்தும் தேர்தலாக நினைக்க வேண்டாம். இந்திய மாநிலங்களில் மக்கள் ஆட்சியையும், இந்தியாவின் பன்முக தன்மையையும், ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்றவும் பா.ஜ.,வை ஆட்சிக்கு வரவிடக் கூடாது.
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் கூட்டாச்சி இருக்காது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் பார்லிமென்ட் முறையே இருக்காது.
கண்ணுக்கு முன் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலை நாளை தமிழகத்திற்கும் ஏற்படலாம்.
மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், மற்ற மாநிலங்களுக்கும், இந்த நிலை ஏற்படலாம். கடந்த 2014 முதல் ஆட்சி செய்யும் பா.ஜ., அரசு, இந்தியாவை எல்லா வகையிலும் பாழ்படுத்தியுள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளை பிரசாரத்தில் ஈடுபட முடியாத வகையில் கைது செய்து வருகின்றனர்.
பா.ஜ., ஜனநாயகத்திற்கு எதிராக ஆடும் ஆட்டம் அழுகுனி ஆட்டம். மோடி ஆட்சிக்கு வருவது நாட்டுக்கு நல்லது அல்ல.
காவிரி உரிமைகளை விட்டுக்கொடுத்த பா.ஜ., அரசையும், அ.தி.மு.க., பழனிசாமியையும் டெல்டா மாவட்ட மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
ஆட்சி பொறுப்பில் இருந்து, பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்த பழனிசாமி எந்த நன்மையும் செய்யாமல் துரோகங்கள் மட்டுமே செய்தார். தொல்லை தரும் கவர்னருக்கு எதிராக பழனிசாமி பேசுவதில்லை.
தமிழக கவர்னர் ரவி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால், அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

