/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 39 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
/
அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 39 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 39 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 39 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
ADDED : மார் 19, 2025 01:34 AM
திருவாரூர்:திருவாரூர் அருகே அரசு பள்ளியில் நேற்று சத்துணவு சாப்பிட்ட, 39 மாணவ - மாணவியர் வாந்தி எடுத்து மயங்கினர்.
திருவாரூர் அருகே தென்னவராயநல்லுார் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், நேற்று 64 மாணவ - மாணவியர் சத்துணவுடன், கொண்டை கடலை சாப்பிட்டனர். பின், வீட்டிற்கு சென்ற மாணவ - மாணவியரில், 3 பேர் வாந்தி எடுத்துள்ளனர்.
மூவரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின், தொடர்ச்சியாக, 36 மாணவ - மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கலெக்டர் மோகனச்சந்திரன் மருத்துவமனை விரைந்து விசாரித்தார். மாணவர்கள் தற்போது நலமுடன் உள்ளனர். பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட அனைவரையும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சத்துணவு விஷமாக மாறி இருக்கலாம் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.