/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
பஸ் - வேன் மோதியதில் 4 பேர் இறப்பு
/
பஸ் - வேன் மோதியதில் 4 பேர் இறப்பு
ADDED : மே 05, 2025 03:50 AM

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே நேற்று காலை, அரசு பஸ்சும் கேரளா ஆம்னி வேனும் மோதிக்கொண்டதில், நான்கு பேர் பரிதாபமாக இறந்தனர்; மூவர் படுகாயம் அடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம், கருவேப்பஞ்சேரி கிராமத்தில், நாகப்பட்டினத்தில் இருந்து, சாயல்குடி நோக்கி சென்ற அரசு பஸ்சும், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து, வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த ஆம்னி வேனும், நேற்று காலை 7:00 மணிக்கு மோதிக்கொண்டன.
இதில், வேன் டிரைவர், சாஜிநாத், 25, வேனில் பயணம் செய்த ராஜேஷ், 30, ராகுல், 29, சுஜித், 25, ஆகியோர் அதே இடத்தில் இறந்தனர். சாபு, 25, சுனில், 35, ரஜினிஷ், 40, ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் மூவரும், மேல் சிகிச்சைக்காக, திருவாரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சம்பவ இடத்தை, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் ஆய்வு செய்தார். திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குபதிந்து, அரசு பஸ் டிரைவர் சரவணன், 49, என்பவரை கைது செய்தனர்.