/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
காதலி கண்முன் குளத்தில் குதித்து காதலன் தற்கொலை
/
காதலி கண்முன் குளத்தில் குதித்து காதலன் தற்கொலை
ADDED : அக் 24, 2025 03:47 AM
திருவாரூர்: காதலி கண் முன் குளத்தில் குதித்து, காதலன் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவாரூர் அருகே மருதப்பட்டினத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 23; பி.பி.ஏ., படித்துள்ளார். இவர், 'இன்ஸ்டாகிராம்' வாயிலாக கும்பகோணத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, 19, என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்தார்.
சில நாட்களாக காதலை தொடர வேண்டாம் என ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார். நேற்று பிரவீன்குமார் கும்பகோணம் சென்று, ஜெயஸ்ரீயை பைக்கில் திருவாரூர் அழைத்து வந்தார்.
வழியில் திருக்கண்ணமங்கை கிராமத்தில் சேட்டாகுளம் கரையில் அமர்ந்து இருவரும் பேசியுள்ளனர்.
காதலை தொடர விருப்பமில்லை என மீண்டும் ஜெயஸ்ரீ தெரிவித்ததால், மனமுடைந்த பிரவீன்குமார் திடீரென குளத்தில் குதித்தார். இதை எதிர்பார்க்காத ஜெயஸ்ரீ, குளத்தில் குதித்து பிரவீன்குமாரை காப்பாற்ற முயன்றுள்ளார்.
அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், பிரவீன்குமார் இறந்தார். குடவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

