ADDED : ஜூலை 12, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முத்துப்பேட்டை:திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே, கள்ளிக்குடியில், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நான்கரை வயது சிறுமி, யு.கே.ஜி., படித்து வருகிறார்.
இவர், சில தினங்களுக்கு முன், பள்ளியில் உள்ள ஆண்கள் கழிவறைக்கு சென்றபோது, அதே பள்ளியில், பிளஸ் 1 படிக்கும், 16 வயது சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். வீட்டிற்கு வந்த சிறுமி, இச்சம்பவத்தை தாயிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த தாய், முத்துப்பேட்டை மகளிர் போலீசில், நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார், 16 வயது சிறுவன் மீது, போக்சோவில் வழக்கு பதிந்துள்ளனர்.