/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
கிராம உதவியாளர் மாநில பொதுக்குழு
/
கிராம உதவியாளர் மாநில பொதுக்குழு
ADDED : ஆக 22, 2011 02:19 AM
திருவாரூர்: 'கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு வழங்குவது
போல'டி' பிரிவு ஊதியம் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்க
மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம்
திருவாரூரில் நேற் று நடந்தது. நிறுவனத் தலைவர் செல்வராஜன் தலைமை
வகித்தார். மாநில செயலாளர் நாகராஜ ன், துணைத்தலைவர் குணசேகரன், இணைப்பெ
õதுச்செயலாளர் குமார் மற்றும் அ.தி.மு.க., சார்பில், நகர செயலாளர்
மூர்த்தி, ஒன்றிய செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.
'கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு வழங்குவது போல, அடிப்படை
ஊதியம், 'டி' பிரிவு ஊதியம் வழங்க வேண்டும். பணியில் உள்ள உதவியாளர்களில்
எஸ்.எ ஸ்.எல்.ஸி.,க்கு மேல் படித்தவர்களுக்கு வி.ஏ. ஓ., மற்றும் இளநிலை
உதவியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். வரும் அக்டோபர் மாதம்
திருவண்ணாமலையில் நடைபெறும் சங்கத்தின் 18வது மாநாட்டில் தமிழக
முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது மற்றும் அந்த மாநாட்டுக்கு நிதியமைச்சர்,
வருவாய்துறை அமைச்சர்களை அழைப்பது' என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணை செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்.