/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
காதல் திருமண தம்பதி துாக்கிட்டு தற்கொலை
/
காதல் திருமண தம்பதி துாக்கிட்டு தற்கொலை
ADDED : நவ 25, 2024 03:38 AM

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, ஆட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சமரசபாண்டியன். இவரது மகன் உதயா, 25, கூலி தொழிலாளி. மூன்று மாதங்களுக்கு முன், நாகை மாவட்டம், நீதியூர் கிராமத்தைச் சேர்ந்த, முருகானந்தம் மகள் ஹேமா, 21, என்பவரை, காதல் திருமணம் செய்தார்.
இருவரும் ஆட்டூரில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். உதயாவிடம் குடிப்பழக்கம் இருந்தது தொடர்பாக, இருவர் இடையே தகராறு ஏற்பட்டது.
உதயா குடித்து விட்டு, நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அதை ஹேமா தட்டிக்கேட்டு உள்ளார்.
அன்று இரவு, 11:00 மணிக்கு, இருவரும் துாங்கச் சென்றனர். நேற்று காலை, 6:00 மணி வரை, வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. பக்கத்தில் வசிக்கும் உதயாவின் சித்தி, உதயா வீட்டின் கதவை தட்டினார்.
கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். கதவை திறந்து பார்த்த போது, உதயா - ஹேமா தம்பதி துாக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். புகாரின் படி, திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.