/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
வீட்டிற்குள் புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது
/
வீட்டிற்குள் புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது
வீட்டிற்குள் புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது
வீட்டிற்குள் புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது
ADDED : அக் 31, 2025 01:09 AM
திருவாரூர்:  பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே நாச்சிக்குளத்தை சேர்ந்தவர் காதர் மைதீன். இவரது மனைவி ரம்ஜான் பீவி, 47. தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். அக்., 28 மாலை, 5:00 மணிக்கு வீட்டின் சமையல் அறையில் ரம்ஜான் பீவி மாவு அரைத்து கொண்டிருந்தார்.
அப்போது, அதே ஊரை சேர்ந்த தீன்ஹனிஸ், 26, என்பவர், ரம்ஜான் பீவியை பாலியல் பலாத்காரம் செய்து தப்பினார்.
சிறிது நேரத்தில், வீட்டிற்கு வந்த இரண்டாவது மகள், தாயை மீட்டு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். புகாரின் படி, முத்துப்பேட்டை மகளிர் போலீசார், தீன்ஹனிசை கைது செய்து விசாரித்தனர்.