/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் மீது 'போக்சோ'
/
சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் மீது 'போக்சோ'
ADDED : அக் 17, 2025 07:45 PM
திருவாரூர்: மன்னார்குடி அருகே, 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து, குடும்பம் நடத்திய வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், மனோஜிபட்டியை சேர்ந்தவர் ஜான்பீட்டர், 25. இவர் , 17 வயது சிறுமியை , ஓராண்டாக காதலித்து வந்துள்ளார்.
கடந்த ஜூலையில் சிறுமியை, மன்னார்குடி அருகே, காலவாய்கரை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் மன்னார்குடியில் வீடு எடுத்து கணவன், மனைவியாக வாழ்ந்தனர்.
சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளார். மன்னார்குடி மகளிர் போலீசார், நேற்று முன்தினம், ஜான்பீட்டர் மீது போக்சோவில் வழக்கு பதிந்துள்ளனர்.
திருவாரூர், புகையிலை தோட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 24. இவருக்கு, 2024 பிப்ரவரியில், திருவாரூர், பழைய நாகை சாலை, தங்க மாரியம்மன் கோவிலில், 17 வயது சிறுமியுடன் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு, இருதரப்பு பெற்றோரும் உடந்தையாக இருந்துஉள்ளனர். இதையறிந்த சமூக நல விரிவாக்க அலுவலர், திருவாரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார், நேற்று முன்தினம் மணிகண்டன் மீது போக்சோவில் வழக்கு பதிந்துள்ளனர். மேலும், திருமணத்தை நடத்தி வைத்த பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.