/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
மாணவி கர்ப்பம்; வாலிபருக்கு 'போக்சோ'
/
மாணவி கர்ப்பம்; வாலிபருக்கு 'போக்சோ'
ADDED : அக் 13, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர்: நர்சிங் மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், குமட்டித்திடல் கிராமத்தை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. இவர், தனியார் நர்சிங் கல்லுாரியில், முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு, பக்கத்து ஊரான, நொச்சியூரை சேர்ந்த நித்திஷ்குமார், 20, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜூலை, 27ல், சித்தமல்லி முருகன் கோவிலில், சிறுமியை, நித்திஷ் குமார் திருமணம் செய்து கொண்டார். இதில், சிறுமி இரு மாத கர்ப்பம் அடைந்தார்.
முத்துப்பேட்டை மகளிர் போலீசார், நேற்று முன்தினம், நித்திஷ்குமார் மீது போக்சோவில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.