ADDED : நவ 06, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே, ஆதனுாரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 28. அதே ஊரை சேர்ந்தவர் சிவரஞ்சனி, 28. இருவரும் பழகி வந்த நிலையில், இருவரும் நெருக்கமாக இருந்ததை வீடியோவாக சுந்தரமூர்த்தி எடுத்து வைத்திருந்தார். அதை, சிவரஞ்சனியின் உறவினர்களுக்கு அனுப்பினார்.
இது தொடர்பான தகராறில் இருவரும் பிரிந்து விட்டனர். கடந்த, ஜூன் 13ல், திருவாரூர் சைபர் கிரைம் போலீசில், சிவரஞ்சனி புகார் செய்தார். போலீசார், நேற்று முன்தினம் வழக்கு பதிந்து, சுந்தரமூர்த்தியை கைது செய்தனர்.

