/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
ஹெல்மெட் இன்றி டூ-வீலரில் பயணித்த மூன்று பேர் பலி
/
ஹெல்மெட் இன்றி டூ-வீலரில் பயணித்த மூன்று பேர் பலி
ADDED : டிச 05, 2024 11:29 PM

நன்னிலம் : இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஹெல்மெட் இன்றி பயணித்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, கடகக்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் வினோத், 32, பார்த்திபன், 26, இளவரசன், 28. கட்டட வேலை செய்து வந்த மூவரும், நேற்று முன்தினம் இரவு காரைக்கால் சென்று விட்டு, நன்னிலம் நோக்கி டூ - வீலரில் வந்து கொண்டிருந்தனர்.
பேரளம் அருகே, இஞ்சிக்குடி கிராமத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிரே, சிவகங்கையில் இருந்து, பேரளம் நோக்கிச் சென்ற வேனும், ஹெல்மெட் அணியாமல் மூவர் சென்ற டூ - வீலரும் நேருக்கு நேர் மோதின. இதில், வினோத், இளவரசன் அதே இடத்தில் இறந்தனர்.
ஆபத்தான நிலையில் இருந்த பார்த்திபனை, திருவாரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் துாக்கி சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
பேரளம் போலீசார் வழக்கு பதிந்து, வேன் டிரைவர் அசோக்பாபுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.