ADDED : அக் 10, 2025 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர்:திருவாரூர் மாவட்டம், கோவில் வெண்ணியை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 32. இவர், திருமணம் ஆகி, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, நமச்சிவாயபுரத்தில் வசிக்கிறார். சில மாதங்களாக புவனேஸ்வரி அவரது தந்தை வீட்டில் வசித்தார்.
நேற்று முன்தினம், புவனேஸ்வரி வீட்டுக்கு வந்த, 60 வயது முதியவர், இருமல், சளிக்கு மருந்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார். அவரிடம், இருமல், சளிக்கு, புவனேஸ்வரி மருந்து கேட்டார். முதியவர், கொடுத்த மருந்தில் மயக்கமடைந்தார். புவனேஸ்வரி அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து முதியவர் தலைமறைவானார். போலீசார் விசாரிக்கின்றனர்