/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பழனிசாமி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்' அ.தி.மு.க., மாஜியின் 'டங்க் ஸ்லிப்'
/
பழனிசாமி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்' அ.தி.மு.க., மாஜியின் 'டங்க் ஸ்லிப்'
பழனிசாமி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்' அ.தி.மு.க., மாஜியின் 'டங்க் ஸ்லிப்'
பழனிசாமி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்' அ.தி.மு.க., மாஜியின் 'டங்க் ஸ்லிப்'
ADDED : மார் 01, 2025 01:27 AM
துாத்துக்குடி, துாத்துக்குடியில் நேற்று முன்தினம் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 'கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்' என பேசியது, சலசலப்பை ஏற்படுத்தியது.
துாத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், நேற்று முன்தினம் இரவு நடந்த ஜெ. பிறந்தநாள் பொதுக கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று பேசியதாவது:
லோக்சபா தேர்தலில் துாத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி, 64 பக்க தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதுகுறித்து, பார்லியில் ஒருமுறை கூட அவர் பேசவில்லை. வாரிசு என்ற அடிப்படையில் கனிமொழி டில்லியில் அக்கட்சியினருக்கு தலைமை வகித்து வருகிறார்.
கடந்த 2021 தேர்தலில், 525 வாக்குறுதிகளை கொடுத்த பழனிசாமி ஏமாற்றிக் கொண்டிருப்பது போல, கனிமொழியும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் பள்ளி முன் கூல் லிப் விற்பனை செய்யும் நிலை உள்ளது. அதை சாப்பிடும் மாணவர்கள் தவறான வழியில் நடந்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் பெயரை குறிப்பிடுவதற்கு பதிலாக, பழனிசாமி பெயரை குறிப்பிட்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என சீனிவாசன் பேசியது, கூடியிருந்த கட்சித் தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
..........................................