/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கோவில்பட்டி கல்வி மாவட்ட தனியார் பள்ளிசெயலாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டம்

ADDED : ஜூலை 13, 2011 02:30 AM
கோவில்பட்டி:கோவில்பட்டி கல்வி மாவட்ட தனியார் பள்ளி செயலாளர்கள் மற்றும்
தலைமையாசிரியர்கள் கூட்டம் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில்
நடந்தது.கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிமளா
தலைமை வகித்தார். கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ராஜலட்சுமி முன்னிலை
வகித்தார். நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் லூயிஸ் இன்பராஜ்
வரவேற்றார். பள்ளிப் பொருளாளர் ஜெயபாலன், நிர்வாகக்குழு உறுப்பினர்
ரத்தினராஜ் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும்
கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலருக்கும் பொன்னாடை அணிவித்தனர். பல தனியார்
பள்ளிச் செயலாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் கலந்து
கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்
குமாரதாஸ் கண்காணிப்பாளர் தூத்துக்குடி முனியப்பன், கோவில்பட்டி கல்வி
மாவட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் கேசவன் தம்பி, பள்ளித்துணை ஆய்வாளர்
விஜயன், உதவியாளர்கள் அய்யனார், சங்கரநாராயணன், முத்துமுனியசாமி,
பால்வண்ணன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில்
பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவன் மைக்கேல் தனது பிறந்தநாள் பரிசாக
பள்ளிக்கு வழங்கிய மரக்கன்றை தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
நட்டினர். ஏற்பாடுகளை திட்ட அலுவலர் வடிவேல், பசுமைப்படை பொறுப்பாளர் முருகேசன்
ஆகியோர் செய்திருந்தனர். முதுகலை ஆசிரியை பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.