/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
புதியம்புத்தூர் டூ தூத்துக்குடி கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
/
புதியம்புத்தூர் டூ தூத்துக்குடி கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
புதியம்புத்தூர் டூ தூத்துக்குடி கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
புதியம்புத்தூர் டூ தூத்துக்குடி கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
ADDED : ஆக 19, 2011 05:21 AM
புதியம்புத்தூர்: புதியம்புத்தூரிலிருந்து தூத்துக்குடிக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கினால் பள்ளி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பயன்பெறுவர்.காலை 7.45 மணிக்கு 2 டவுன் பஸ்களுக்குப்பிறகு புதியம்புத்தூரிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல 8.15 மற்றும் 8.30 மணிக்குத்தான் பஸ் உள்ளது.
புதியம்புத்தூரிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அதிகமான மாணவ மாணவியரும், தொழில்நிமித்தம் செல்வோரும் பஸ்வசதி இல்லாமல் திண்டாடுகின்றனர்.
5 பஸ்களுக்கு பயணிகள் இருக்கும்போது 2 பஸ்களில் எத்தனை பயணிகள் செல்ல முடியும். படியில் தொங்கி கொண்டு மாணவர்கள் பயணம் செய்கின்றனர். அதுபோல் மாலை 4.00 மணிமுதல் 4.45 வரை பஸ் கிடையாது.
45 நிமிடம் பஸ் இல்லாததாலும் பள்ளி மாணவர்களின் கூட்டத்தாலும் இந்த நேரமும் பஸ் இல்லாமல்பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.எனவே காலை 8 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் கூடுதல் பஸ் இயக்கி பயணிகளுக்கும் மாணவ, மாணவியர்களுக்கும் உதவிட வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.