/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஆணவ கொலையான வாலிபர் உடல் சொந்த ஊரில் தகனம்
/
ஆணவ கொலையான வாலிபர் உடல் சொந்த ஊரில் தகனம்
ADDED : ஆக 02, 2025 02:15 AM

துாத்துக்குடி:ஆணவ கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல், ஐந்து நாட்களுக்கு பின் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின வாலிபர் கவின் செல்வ கணேஷ், 27; சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 27ம் தேதி பாளையங்கோட்டையில் கவின் ஆணவ கொலை செய்யப்பட்டார்.
அவரை கொலை செய்த, அவரது காதலியின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டார். 'சுர்ஜித் பெற்றோரையும் கைது செய்தால் மட்டுமே உடலை பெறுவோம்' என, கவின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, சுர்ஜித் தந்தையான எஸ்.ஐ., சரவணன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அமைச்சர்கள், காவல் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு, கவினின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
அவரது சொந்த ஊரில், உறவினர்கள் அஞ்சலிக்கு பின், உடல் தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, ஆணவ கொலை செய்யப்பட்ட கவினின் வீட்டில் தமிழக தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேற்று விசாரணை நடத்தினர்.

