/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தமிழ் பயன்பாட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் முன்னணி
/
தமிழ் பயன்பாட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் முன்னணி
ADDED : ஜூலை 13, 2011 02:35 AM
புதூர்:தமிழகத்தில் அரசு துறைகளில் அ திகமாக தமிழை பயன்படுத்துவதில்
பத்திரப்பதிவு துறை முன்னணியில் உள்ளதாக த மிழ் வளர்ச்சி துறை
கணக்கெடுத்துள்ளது. ஆங்கில முத்திரைகளை தமிழில் மாற்ற தமிழ்வளர்ச்சி
துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.தமிழக அரசு துறைகளில் தமிழை அதிகம்
பயன்படுத்த வேண்டும் என தமிழ்வளர்ச்சி துறை அறிவுறுத்தி வருகிறது.
மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் சம்பள மற்றும் வருகை பதிவேட்டில்
தமிழில் கையொப்பமிடுகின்றனரா? என ஆய்வு செய்கின்றனர்.
கையொப்பமிடாதநபர்களை
தமிழில் கையொப்பமிட அறிவுறுத்துகின்றனர். இந்த ஆய்வில் பத்திரப்பதிவு
துறையினர் மட்டுமே 100 சதவீதம் தமிழ் பயன்படுத்தி வருகின்றனர். இதை
தொடர்ந்து நூலகத்துறையில் தமிழ் அதிகளவில் பயன்படுத்தப்படுவது
தெரியவந்துள்ளது. கல்வி, வேளாண், சுகாதாரம் ஆகிய துறைகளில் முத்திரைகள்,
பட்டிகள் என கூறப்படும் கருவூல செலான்கள், கம்ப்யூட்டர் பயன்பாடு
ஆங்கிலத்தில் உள்ளது. இந்த அலுவலகங்கள் உட்பட அனைத்து துறை அலுவலங்களிலும்
ஆங்கிலத்தை தவிர்த்து தமிழை முழுவீச்சில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தி
வருகின்றனர்.

