/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஆனந்தபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
/
ஆனந்தபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
ADDED : ஜூலை 15, 2011 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாசரேத்:நாசரேத் அருகேயுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் இலவச கண்சிகிச்சை
முகாம் நடந்தது.ஆனந்தபுரம் ரஞ்சி ஆரோன் நினைவு அறக்கட்டளையும்,
திருநெல்வேலி அரவிந்த் கண் ஆஸ்பத்திரியும் இணைந்து இலவச கண்சிகிச்சை
முகாமினை நடத்தினர்.
முகாமிற்கு ரஞ்சி ஆரோன் ஐ.டி.ஐ.தாளாளர் பத்மினி ஆரோன்
தலைமை வகித்தார். அறக்கட்டளை செயலாளர் பொன்சந்திரன், நிர்வாக அதிகாரி
சுதாகர், முதல்வர் உடையார், தொழிற்பள்ளி முதல்வர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். 225 பேர் சிகிச்சை பெற்றனர். 85 பேர் சிகிச்சைக்காக
திருநெல்வேலி அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.