/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கோவில்பட்டியில் திமுக., ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
/
கோவில்பட்டியில் திமுக., ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
கோவில்பட்டியில் திமுக., ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
கோவில்பட்டியில் திமுக., ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : செப் 25, 2011 12:50 AM
கோவில்பட்டி: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது திமுக.,வேட்பாளர்களல்ல, கருணாநிதியும், ஸ்டாலினும் போட்டியிடுவதால் அவர்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கோவில்பட்டியில் நடந்த திமுக.,ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பேசினார்.கோவில்பட்டி சிதம்பர நாடார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் சோழபெருமாள் தலைமை வகித்தார்.
ஒன்றிய துணைச் செயலாளர்கள் பொன்னுச்சாமி, அன்புபேகன், விஜயலட்சுமி, பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எட்டயபுரம் டவுன் பஞ்.,நகர செயலாளர் பாரதிகணேசன் வரவேற்றார். தொடர்ந்து திமுக.,மாவட்ட செயலாளர் பெரியசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கோவில்பட்டி யூனியனில் சேர்மன் பொறுப்பில் நாம் ஏற்கனவே இருந்து கொண்டு ஏராளமான பணிகளை செய்திருக்கிறோம். எனவே தற்போதைய உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது நமது வேட்பாளர்களல்ல. மாறாக நமது தலைவர் கருணாநிதியும், தளபதி ஸ்டாலினும் போட்டியிடுவதால் நமது வேட்பாளர்களை வெற்றியடைய செய்வதன் மூலம் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்த கருத்தோடு உழைக்க வேண்டுமென திமுக.,மாவட்ட செயலாளர் பெரியசாமி பேசினார். திமுக.,ஒன்றிய செயலாளரும், கோவில்பட்டி யூனியன் சேர்மனுமான முருகேசன் நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ.,ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் ராமர், தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், பஞ்.,கூட்டமைப்பு தலைவர் பச்சமால், யூனியன் துணைச் சேர்மன் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் முருகேசன் செய்திருந்தார்.