ADDED : ஆக 19, 2011 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இந்திய கம்யூ (மார்க்சிஸ்ட்) கட்சியின் கிளைமாநாடு நடந்தது.
மாநகர செயலாளர் அர்ச்சுனன் மாநாட்டை துவக்கிவைத்து பேசினார். 4ஆண்டுகால வேலை அறிக்கையினை கிளை செயலாளர் முருகன் சமர்பித்தார். கூட்டத்தில் தூத்துக்குடி 26 வது வார்டில் கழிவு நீர் ரோட்டில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கவேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. கூட்ட த்தில் கிளை உறுப்பினர்கள் சாம்பசிவம், ஆறுமுகம், மாரியப்பன், முருகன், முனியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.