/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சிண்டிகேட் பாங்கில் வாடிக்கையாளர் தினம்
/
சிண்டிகேட் பாங்கில் வாடிக்கையாளர் தினம்
ADDED : செப் 25, 2011 12:45 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி சிண்டிகேட் பாங்கில் வாடிக்கையாளர் தினம்கொண்டாடப்பட்டது.
புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக காசா திருவிழா கொண்டாடப்பட்டது. இத்திட்டத்தின்படி நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் புதிதாக கணக்கு துவங்குபவர்களுக்கும் ரெயின்போ பேக்கேஜ் எனப்படும் 7 வசதிகள் செய்துதரப்படுகிறது. விழாவில் சிண்டிகேட் பாங்கின் உதவிமேலாளர் கிரேஸ்அரசு வாடிக்கையாளர்களை வரவேற்று பேசினார். மேலும் வாடிக்கையாளர்களுக்கு பாங்கின் சிறப்பு திட்டங்கள் மற்றும் காசா ரெயின்போ பேக்கேஜ் பற்றி பாங்கின் முதுநிலை மேலாளர் சண்முகம் பேசினார்.மேலாளர் ஆறுமுகநயினார் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இறுதியில் பாங்க் ஊழியர்களுக்கு வினாடிவினா நிகழ்ச்சிநடத்தப்பட்டது.