ADDED : ஜூலை 14, 2011 12:47 AM
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் சுதந்திரபோராட்ட தியாகி அழகுமுத்துக்கோன் நினைவு நாள் விழா நடந்தது.
கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் கிராமம் உள்ளது. இங்கு பிறந்த சுதந்திர போராட்ட தியாகி வீரன் அழகுமுத்துக்கோனின் 252 வது நினைவுநாள் விழா நடந்தது. தமிழக அரசின் வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டலத்தில் நடந்த விழாவிற்கு ஜனநாயக மக்கள் தமிழ்தேசம் மற்றும் தமிழ்நாடு யாதவ மகாசபை நிர்வாகிகள் சார்பில் மாலை மரியாதை நிகழ்ச்சி நடந்தது. மேலும் யாதவ மகாசேவை தலைவர் தேவநாதன் பேசினார். இதையடுத்து அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியின் தமிழ்நாடு யாதவ மகாசபை இணை செயலாளர் சுபசிவபெருமாள், ஜனநாயக மக்கள் தமிழ்தேச தலைமை நிலைய செயலாளர் கணேசமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஜனநாயக மக்கள் தமிழ்தேச கட்சியினர் செய்திருந்தனர்.

