/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடி - திருச்செந்துார் இடையே 10 மீ. அகல சாலை அமைக்கும் பணி அடுத்த ஆண்டு துவக்கம்

ADDED : செப் 05, 2024 08:35 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் நடந்து வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ., வேலு அளித்த பேட்டி:
துாத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தின் போது சேதமடைந்த 135 சாலைகளை தற்காலிக சீரமைக்கும் பணிகள் 140 கோடி ரூபாய் செலவில் முழுமையாக முடிவடைந்தது. வெள்ளத்தின்போது அதிக சேதமடைந்த ஏரல் பாலம் சீரமைக்கு பணி இம்மாத இறுதியில் முடிவடையும்.
துாத்துக்குடி மூன்றாம் கேட் ரயில்வே பாலதில் சர்வீஸ் ரோடு, விவிடி சிக்னல் அருகே உள்ள மேம்பாலம் அமைப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நல்ல தீர்ப்பு வரும் என அரசு நம்புகிறது. அதன் பின்பு மேல்மட்ட பாலம், சர்வீஸ் ரோடு போடும் இரண்டும் முன்னுரிமை அடிப்படையில் இந்த நிதி ஆண்டில் உடனடியாக நிறைவேற்றப்படும்.
போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் 10 மீட்டர் அகலம் கொண்ட சலையாக விரிவுபடுத்த முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அதன்படி, துாத்துக்குடி - திருச்செந்துார் நெடுஞ்சாலையில் புதிய சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் ஆண்டிலேயே அந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழகத்தில் எந்தவொரு சாலையை விரிவாக்கம் செய்வதாக இருந்தாலும் 90 சதவிகதம் நில எடுப்பு முடிந்த பின் ஒப்பந்தம் விட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கேற்ப பணிகள் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.