/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
105 வயது மூதாட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்
/
105 வயது மூதாட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்
ADDED : மே 04, 2024 01:13 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள மேல மங்களக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராமலெட்சுமி. இவரது 105வது பிறந்தநாள் விழா அவரது வீட்டில் நடந்தது. ஐந்து தலைமுறைகளை சேர்ந்த குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து அவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
பின்னர், ராமலெட்சுமி முன்னிலையில் அவரது குடும்பத்தினர் அனைவரும் மரக்கன்றுகளை நடவு செய்தனர். தொடர்ந்து, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தாம்பூல தட்டுகளில் பழங்கள் மற்றும் இனிப்புகளை கொண்டு வந்து அவரிடம் கொடுத்து ஆசி பெற்றனர்.
ராமலெட்சுமிக்கு பெரியசாமி என்ற மகனும், பொன்னாத்தா, அன்னபழம் செந்துார்கனி என்ற மகள்களும் உள்ளனர். அவர்கள் மும்பை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
ராமலெட்சுமியின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகன், மகள்கள், பேரன்கள், பேத்திகள், என ஐந்து தலைமுறையினர் மேல மங்களக்குறிச்சி கிராமத்தில் ஒன்று கூடி வெகு விமர்சையாக கொண்டாடினர்.
105 வயது மூதாட்டியான ராமலெட்சுமி ஏப்., 19ல் நடந்த லோக்சபா தேர்தலில் ஓட்டளித்து தன் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் தங்களுக்கு மன நிறைவை தந்ததாக ராமலெட்சுமி குடும்பத்தினர் தெரிவித்தனர்.