/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
வெளி மாநில லாரிகளுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்
/
வெளி மாநில லாரிகளுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்
ADDED : ஜூலை 25, 2024 10:09 PM

துாத்துக்குடி:திருச்செந்துார் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு சாத்தான்குளம் பன்னம்பாறை விலக்கு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக, அதிக பாரம் ஏற்றிய மூன்று சரக்கு டாரஸ் லாரிகளை மறித்து ஆவணங்களை சரிபார்த்தனர்.
மூன்று லாரிகளும் பிற மாநிலங்களை சேர்ந்தவை. லோக்கல் பெர்மிட் இல்லாமல் இயங்கியது தெரிந்தது. லோக்கல் பர்மிட் இல்லாதது மற்றும் அதிக பாரம் ஏற்றி வந்ததற்காக மூன்று லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த லாரிகளுக்கு, 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என, மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் தெரிவித்தார்.