/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.29 கோடி சாரஸ் போதைப் பொருள் பறிமுதல்
/
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.29 கோடி சாரஸ் போதைப் பொருள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.29 கோடி சாரஸ் போதைப் பொருள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.29 கோடி சாரஸ் போதைப் பொருள் பறிமுதல்
ADDED : செப் 03, 2024 02:42 AM

துாத்துக்குடி: இலங்கைக்கு கடல் வழியே கடத்த இருந்த 29 கோடி ரூபாய் மதிப்பிலான 58 கிலோ சாரஸ் எனும் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் போதைப் பொருள்கள், அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுகின்றன.
துாத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீசார் நேற்று சோதனை மேற்கொண்ட போது ஒரு படகில் இலங்கைக்கு கடத்த இருந்த 58 கிலோ சாரஸ் எனும் அதி போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 29 கோடி ரூபாய்.
இது தொடர்பாக துாத்துக்குடி சவேரியார்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அமல்ராஜ், தெர்மல்நகர் நிஷாந்த், தாளமுத்துநகர் விக்டரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2020 ஆகஸ்டில் இதே போல திருச்செந்துார் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 2 கோடி மதிப்பிலான சாரஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.