/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பீடி இலை கடத்திய மீனவர்கள் 3 பேர் இலங்கையில் கைது
/
பீடி இலை கடத்திய மீனவர்கள் 3 பேர் இலங்கையில் கைது
ADDED : ஆக 13, 2024 11:43 PM
துாத்துக்குடி,:துாத்துக்குடி மாவட்ட கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகுகள் வாயிலாக பீடி இலைகள் போன்றவை கடத்தப்படுகின்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை, இலங்கை கடற்படைக்கு சொந்தமான 'சுரக் ஷா' என்ற ரோந்து கப்பல், இலங்கை கடற்பகுதியில் சென்ற தமிழக பைபர் படகை சோதனையிட்டனர். அந்தப் படகில், பீடி இலைகள் 2,082 கிலோ இருந்தன.
இதையடுத்து படகில் இருந்த, துாத்துக்குடியைச் சேர்ந்த ஜேசுராஜ், 42, பிராங்பட், 28, ராஜிவ், 40 ஆகியோரை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பீடி இலைகள், பைபர் படகு ஆகியவற்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். பின், அவர்கள் வாரியபோல சுற்றுலா சிறையில் அடைக்கப்பட்டனர்.