/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துாரில் காலாவதியான 386 கிலோ பஞ்சாமிர்தம் பறிமுதல்
/
திருச்செந்துாரில் காலாவதியான 386 கிலோ பஞ்சாமிர்தம் பறிமுதல்
திருச்செந்துாரில் காலாவதியான 386 கிலோ பஞ்சாமிர்தம் பறிமுதல்
திருச்செந்துாரில் காலாவதியான 386 கிலோ பஞ்சாமிர்தம் பறிமுதல்
ADDED : ஏப் 23, 2024 08:17 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான குழுவினர், திருச்செந்துாரில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான பஞ்சாமிர்தம் தயாரிப்பு ஆலையை நேற்று ஆய்வு செய்தனர். அதில் காலாவதி தேதி உள்ளிட்ட லேபிள் விபரங்கள் இல்லாத 2,940 கிலோ நாட்டுச் சர்க்கரை, 357 கிலோ பஞ்சாமிர்தம் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. சுகாதார குறைபாடுகள் காரணாக அந்த நிறுவனத்தின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்துார் சுப்பிரமணியபுரத்தில் உள்ள வேலாயுதப்பெருமாள் என்பவருக்குச் சொந்தமான முருகவிலாஸ் பஞ்சாமிர்த ஆலையில், லேபிள் விபரங்கள் இல்லாத 300 கிலோ நாட்டுச் சர்க்கரையும், 29 கிலோ பஞ்சாமிர்தமும் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
அதுபோல, உடன்குடி பகுதியில் உள்ள பிரபாஜோதி என்பவருக்குச் சொந்தமான ஏ.ஏ.ஜே டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது 13 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

