/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
60 கிலோ சாரஸ் பறிமுதல் வக்கீல் உட்பட மூவர் கைது
/
60 கிலோ சாரஸ் பறிமுதல் வக்கீல் உட்பட மூவர் கைது
ADDED : செப் 03, 2024 02:31 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்ட திரேஸ்புரம் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து, இலங்கைக்கு படகு மூலம் போதைப் பொருள் கடத்த திட்டமிட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்படி, கியூ பிரிவு போலீசார் நேற்று அங்கு திடீரென சோதனை நடத்தினர்.
அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்து வரப்பட்ட கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்பட்ட சாரஸ் என்ற போதைப்பொருள், 60 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, சவேரியார்புரத்தை சேர்ந்த வழக்கறிஞர் அமல்ராஜ், 46, நிஷாந்தன், 32, இன்பென்ட் விக்டர், 31, ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறியதாவது:
கஞ்சா செடியில் இருந்து கிடைக்கும் பிசின் போன்ற பொருளை உருக்கி, சாரஸ் போதைப் பொருள் உருவாக்கப்படுகிறது. தற்போது, பறிமுதல் செய்யப்பட்டுள்ள, 60 கிலோ சாரஸ் போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு, 30 கோடி ரூபாய்.
இவ்வாறு கூறினர்.