/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சிறையில் கூடா நட்பு ரூ.7 லட்சம் திருட்டு
/
சிறையில் கூடா நட்பு ரூ.7 லட்சம் திருட்டு
ADDED : மே 05, 2024 12:31 AM
தூத்துக்குடி,:சிறையில் ஏற்பட்ட கூடா நட்பால் திருச்செந்துார் அருகே வீட்டில் ரூ. 7 லட்சம் திருடு போனது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் ஆனந்தலிங்கம். கஞ்சா வழக்கில் சிறையில் உள்ளார். சேதுக்குவாய்த்தானை சேர்ந்த சதீஷ் திருட்டு வழக்கில் சிறையில் இருந்தார். ஆனந்தலிங்கம், சதீஷிடம் தனது வீட்டில் தாயார் பார்வதி தனியாக இருப்பது குறித்து பேசியுள்ளார்.
சில தினங்களுக்கு முன் சதீஷ் மட்டும் ஜாமினில் வந்தார். காயல்பட்டினத்தில் உள்ள ஆனந்தலிங்கம் வீட்டிற்கு சென்றார். அவரது தாயாரிடம் திருச்செந்தூர் கோர்ட்டுக்கு மகன் வருவதாக கூறினார். பார்வதிஅம்மாள் வீட்டைப்பூட்டி சாவியை வைக்கும் இடத்தை சதீஷ் நோட்டமிட்டார். இருவரும் திருச்செந்தூர் கோர்ட்டுக்கு சென்றனர்.
சிறிது நேரம் காக்க வைத்து விட்டு இன்று ஆனந்தலிங்கம் வரவில்லை எனக் கூறி நீங்கள் வீட்டுக்கு கிளம்புங்கள் என அனுப்பி வைத்தார். பார்வதி வீட்டுக்கு வரும் முன்பாகவே சதீஷ் வீட்டுக்கு வந்து மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டில் இருந்த ரூ.7 லட்சத்தை திருடிச் சென்றார். ஆறுமுகநேரி போலீசார் விசாரிக்கின்றனர்.