/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
9000 லி. கலப்பட டீசல் பறிமுதல் துாத்துக்குடியில் 2 பேர் கைது
/
9000 லி. கலப்பட டீசல் பறிமுதல் துாத்துக்குடியில் 2 பேர் கைது
9000 லி. கலப்பட டீசல் பறிமுதல் துாத்துக்குடியில் 2 பேர் கைது
9000 லி. கலப்பட டீசல் பறிமுதல் துாத்துக்குடியில் 2 பேர் கைது
ADDED : ஜூலை 05, 2024 02:15 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அருகே சந்தேகப்படும்படி மினி லாரி நிற்பதாக மாவட்ட தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மினி லாரியை சோதனை செய்த போது, லாரியில் பேரல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
பேரல்களை சோதனை செய்த போது, டீசல்போன்ற திரவம் கடத்தி வரப்பட்டிருந்தது. தனிப்படை போலீசார் துாத்துக்குடி சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் மினி லாரியில் இருந்த 60 பேரல்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 9000 லிட்டர் டீசல் போன்ற திரவம் இருந்தது. இந்த திரவத்தின் மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர். முதற்கட்ட பரிசோதனையில், பேரல்களில் 6 லட்சம் மதிப்பு கலப்பட டீசல் இருப்பது தெரிந்தது.
கலப்பட டீசலை கடத்தியதாக ஒட்டன்சத்திரம் காவேரிஅம்மாபட்டியை சேர்ந்த பிரதீப், 30, அதே பகுதி தங்கச்சியம்மாபட்டி கிட்டப்பன், 37 கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, மதுரையில் இருந்து மினி லாரியில் கலப்பட டீசலை துாத்துக்குடிக்கு கடத்தி வந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன்பிடி படகுகளுக்கு விற்பனை செய்ய இருந்தது தெரிந்தது.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என மேல்விசாரணை நடந்து வருகிறது.