/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஆணி படுக்கை மீது யோகா அசத்திய 5 வயது சிறுமி
/
ஆணி படுக்கை மீது யோகா அசத்திய 5 வயது சிறுமி
ADDED : ஜூன் 21, 2024 02:20 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, இந்திய யோகா ஆராய்ச்சி மையம் சார்பில், உலக யோகா தின நிகழ்ச்சி நடந்தது.
இதில், கோவில்பட்டி எடுஸ்டார் இன்டர்நேஷனல் பள்ளி 5ம் வகுப்பு மாணவி ரவீணா, 11, ஆணி படுக்கையின் மீது அமர்ந்து யோகாசனங்களை செய்தார்.
நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு துாத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். வணிகர் சங்க மாநில தலைவர் காமராசு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கல்பனா நடுவராக பணியாற்றினார். மாணவி ரவீணா ஆணி படுக்கையில் அமர்ந்து 80 யோகாசனங்களை செய்து அசத்தினார்.
இதுகுறித்து, மாணவி ரவீணாவின் தாய் ரம்யா கூறியதாவது:
நான்கு வயது முதல் ரவீணா யோகா பயிற்சி செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இதுவரை 8 உலக சாதனை நிகழ்ச்சிகளிலும், 12 விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநில கவர்னர்களிடம் யோகா செய்து பாராட்டுகளை பெற்றுள்ளார். யோகா மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து உலக சாதனை படைப்பது மாணவி ரவீணாவின் லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.