/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
டூ - வீலர் ஓட்டிய சிறுவன் 6ம் வகுப்பு மாணவர் பலி
/
டூ - வீலர் ஓட்டிய சிறுவன் 6ம் வகுப்பு மாணவர் பலி
ADDED : ஆக 27, 2024 04:18 AM
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், தெற்கு நல்லுாரை சேர்ந்த கண்ணம்மா மகன் சக்திராஜா, 14. ஆறுமுகநேரி அருகேயுள்ள பேயன்விளை பள்ளியில் கடந்த ஆண்டு எட்டாம் வகுப்பு படித்த நிலையில், தற்போது பள்ளி செல்லாமல் வீட்டில் இருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அஸ்வின், 13.
இவர், வரண்டியவேல் அகோபாலபுரம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நண்பர்களான இருவரும், ஹெல்மெட் அணியாமல், குரும்பூருக்கு டூ - வீலரில் சென்று, நேற்று வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
சக்திராஜா டூ - வீலரை ஓட்டினார். குரும்பூர் பஜாரில் சென்றபோது, நெல்லையிலிருந்து திருச்செந்துார் நோக்கி சென்ற லாரி, டூ - வீலர் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே மாணவர் அஸ்வின் உயிரிழந்தார். காயமடைந்த சக்திராஜா துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குரும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
துாத்துக்குடி மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த லாரி டிரைவர் மணிராஜ், 45, என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.