/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
அத்திரிமலை சென்ற கல்லுாரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி
/
அத்திரிமலை சென்ற கல்லுாரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி
அத்திரிமலை சென்ற கல்லுாரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி
அத்திரிமலை சென்ற கல்லுாரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி
ADDED : ஏப் 24, 2024 10:10 PM
ஆழ்வார்குறிச்சி:அத்திரிமலை சென்ற கல்லுாரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
துாத்துக்குடி தெய்வசெயல்புரத்தை சேர்ந்தவர் திருப்பதி மகன் முத்துகுமார், 18. இவர் பாளையில் உள்ள கல்லூரியில் பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். தனியார் பயிற்சி மையத்திலும் பயிற்சி பெற்று வந்தார். தனியார் பயிற்சி மையத்தின் நிர்வாகி பொறுப்பில் 15 மாணவர்கள் ஆழ்வார்குறிச்சி அருகே கடனா அணை பகுதியில் உள்ள கோரக்கநாதர் கோயிலில் நடந்த சித்ரா பவுர்ணமி விழாவில் கலந்து கொண்டனர். திரும்பி வரும் வழியில் கல்லாற்றில் நண்பர்களுடன் சேர்ந்து முத்துக்குமார் குளித்தார்.
திடீரென முத்துகுமார் காணாமல் போனார். நண்பர்கள் தேடி பார்த்த போது இவர் தண்ணீரில் மூழ்கி இறந்து போனது தெரிந்தது. புகாரின் படி, கடையம் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்.