/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
அ மைச்சர் சொத்து வழக்கு அ மலாக்கத்துறை மனு தள்ளுபடி
/
அ மைச்சர் சொத்து வழக்கு அ மலாக்கத்துறை மனு தள்ளுபடி
அ மைச்சர் சொத்து வழக்கு அ மலாக்கத்துறை மனு தள்ளுபடி
அ மைச்சர் சொத்து வழக்கு அ மலாக்கத்துறை மனு தள்ளுபடி
ADDED : ஜூலை 04, 2024 02:45 AM
துாத்துக்குடி,:அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 2001 - 2006ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக, 4.90 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, சகோதரர்கள் சண்முகநாதன், சிவானந்தன், மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இவ்வழக்கு விசாரணை துாத்துக்குடி மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உதவ தங்களையும் மனுதாரருடன் சேர்க்க அனுமதி கோரி, அதே கோர்ட்டில், அமலாக்கத் துறை அதிகாரி கார்த்திகேயன், கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தார்.
இம்மனு மீதான விசாரணை பல மாதங்களாக நடந்து வருகிறது.
கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜராகி வாதிடுகையில், 'அமலாக்கத் துறையை இவ்வழக்கில் இணைக்கக் கூடாது' என்றார்.
கடந்த மாதம் 26ம் தேதி நடந்த விசாரணையில், ஜூலை 10ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உதவ, தங்களையும் மனுதாரராக சேர்க்க கோரிய அமலாக்கத்துறை மனுவை, நீதிபதி அய்யப்பன் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.