/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கோவில்பட்டியில் ஓசிக்கு சரக்கு தர மறுத்த ஒயின் ஷாப் பார் ஊழியர் வெட்டி கொலை
/
கோவில்பட்டியில் ஓசிக்கு சரக்கு தர மறுத்த ஒயின் ஷாப் பார் ஊழியர் வெட்டி கொலை
கோவில்பட்டியில் ஓசிக்கு சரக்கு தர மறுத்த ஒயின் ஷாப் பார் ஊழியர் வெட்டி கொலை
கோவில்பட்டியில் ஓசிக்கு சரக்கு தர மறுத்த ஒயின் ஷாப் பார் ஊழியர் வெட்டி கொலை
ADDED : மே 08, 2024 07:13 PM

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கிருஷ்ணாநகர் பெத்தேல் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்த முருகன் என்பவர் பார் நடத்தி வருகிறார் . இந்த பாரில் கோவில்பட்டி இந்திரா நகரை சேர்ந்த (60) வயது முதியவர் குருசாமி என்பவர் வேலை பார்த்து வந்தார்.
அங்கு கயத்தாறு சிதம்பரம்பட்டியை சேர்ந்த மூக்கையா பாண்டியன் என்பவர் கடந்த சில தினங்களாக வந்து மது அருந்திவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். வழக்கம்போல இன்று நண்பகல் 2 மணியளவில் டாஸ்மாக் பாருக்கு வந்த மூக்கையா பாண்டியன், சரக்கு கேட்டுள்ளார். பணம் கொடுத்தால் தான் சரக்கு தர முடியும் என பார் ஊழியர் குருசாமி தெரிவித்துள்ளார்.
அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் மூக்கையா பாண்டியன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பார் ஊழியர் குருசாமியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பார் ஊழியர் குருசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவ இடத்தில் தடயங்களை கைப்பற்றிய போலீசார் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மூக்கையா பாண்டியனை தேடி வருகின்றனர்.
ஏற்கனவே இந்த பாரை தலைமறைவாக உள்ள மூக்கையா முதலில் பொறுப்பு எடுத்து நடத்தியதாகவும், பாரில் விற்ற பணத்தை சரியாக செலுத்தவில்லை என்பதால் முருகன் பாரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொலை செய்யப்பட்ட குருசாமியை வைத்து வேலை பார்த்து வந்துள்ளார்.
இது மூக்கையா பாண்டியனுக்கு கோபத்தினை ஏற்படுத்தியது மட்டுமின்றி, கடந்த சில தினங்களாக மது அருந்தி விட்டு பணம் கொடுக்கமால் சென்றதை குருசாமியை தட்டி கேட்கவே ஆத்திரமடைந்த மூக்கையா பாண்டியன் கொலை செய்து விட்டு தப்பியோடி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

