/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
நடுரோட்டில் பிரசவித்த பெண் ஆம்புலன்ஸ் இல்லாத அவலம்
/
நடுரோட்டில் பிரசவித்த பெண் ஆம்புலன்ஸ் இல்லாத அவலம்
நடுரோட்டில் பிரசவித்த பெண் ஆம்புலன்ஸ் இல்லாத அவலம்
நடுரோட்டில் பிரசவித்த பெண் ஆம்புலன்ஸ் இல்லாத அவலம்
ADDED : ஜூலை 04, 2024 02:21 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகேயுள்ள குமாரபுரத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி ஹேமலதா, 31. இவர், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யாசகம் பெற்று வந்தார். எட்டு மாத கர்ப்பிணியான ஹேமலதா நேற்று முன்தினம் கோவிலில் இருந்து, தமிழ்நாடு ஹோட்டல் அருகே நடந்து சென்ற போது பிரசவ வலி ஏற்பட்டு சாலையில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் ஹேமலதாவுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.
குறைப் பிரசவத்தில் பிறந்ததால், குழந்தையை மேல் சிகிச்சைக்காக, துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப டாக்டர்கள் முடிவு செய்தனர். ஆனால், பச்சிளம் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் சிறப்பு ஆம்புலன்ஸ் திருச்செந்துார் அரசு மருத்துவமனையில் இல்லை.
இதனால், துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருந்து சிறப்பு பச்சிளங்குழந்தைகள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. ஹேமலதாவும் உடன் அழைத்துச் செல்லப்பட்டார்.