/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் கோவிலில் நடிகை நயன்தாரா தரிசனம்
/
திருச்செந்துார் கோவிலில் நடிகை நயன்தாரா தரிசனம்
ADDED : மே 14, 2024 07:47 PM

துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழக்கம் போல பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் திடீரென சுவாமி தரிசனத்திற்காக வருகை தந்தனர்.
அவர்களை கண்டதும் மக்கள் குவிந்தனர். அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அவர் பெயர் கூறி கூச்சல் போட்டனர். அவரும் கை காண்பித்து வணக்கம் தெரிவித்தார்.
பின், கோவில் பிரகாரம் வழியாக பேட்டரி காரில் கோவிலுக்கு சென்று, சுப்பிரமணிய சுவாமி, சண்முகர் மற்றும் பரிவார தெய்வங்களை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி வழிபட்டனர். கோவில் சார்பில் அவர்களுக்கு புஷ்பம் மற்றும் பிரசாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
போலீசார், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என பலர் நடிகை நயன்தாராவுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நயன்தாராவின் திடீர் வருகையால் திருச்செந்துார் கோவில் பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

