/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கோவில்பட்டியில் 17 ஆண்டுகளாக பயனின்றி காட்சியளிக்கும் கூடுதல் பஸ் நிலையம்
/
கோவில்பட்டியில் 17 ஆண்டுகளாக பயனின்றி காட்சியளிக்கும் கூடுதல் பஸ் நிலையம்
கோவில்பட்டியில் 17 ஆண்டுகளாக பயனின்றி காட்சியளிக்கும் கூடுதல் பஸ் நிலையம்
கோவில்பட்டியில் 17 ஆண்டுகளாக பயனின்றி காட்சியளிக்கும் கூடுதல் பஸ் நிலையம்
ADDED : ஜூலை 12, 2024 08:26 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலை அருகே சுமார் 3.97 ஏக்கரில் ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. 2007 ல் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த, தற்போதையை முதல்வர் ஸ்டாலின் கூடுதல் பஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.
சில மாதங்கள் மட்டுமே பஸ் நிலையம் செயல்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக வெறும் காட்சி பொருளாக மட்டுமே பஸ் நிலையம் உள்ளது. சென்னை, நாகர்கோவில், கோவை, சேலம், மதுரை, பெங்களூரு, ஓசூர், திருப்பதி என வெளியூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள் கூடுதல் பஸ் நிலையம் வழியாக தான் செல்லும் நிலை உள்ளது. ஆனால், பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் சர்வீஸ் சாலையில் பயனிகளை இறக்கி செல்லும் அவல நிலை இருந்து வருகிறது.
கூடுதல் பஸ் நிலையத்தில் பல்வேறு பகுதிகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே, பஸ் நிலையத்தை புதுப்பித்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், அண்ணா பஸ் நிலையத்துக்கும், கூடுதல் பஸ் நிலையத்துக்கும் இடையே சர்க்குலர் பஸ் இயக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவில்பட்டி நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் புதுப்பிக்கும் பணிகள் நடந்த காரணத்தால் கூடுதல் பஸ் நிலையத்தின் ஒரு பகுதி காய்கறிகள் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
நகராட்சி தினசரி சந்தை பணிகள் முடிவடைந்து கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளதால், கூடுதல் பஸ் நிலையத்தில் கடை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தினசரி சந்தையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பஸ் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது திறந்து வைக்கப்பட்ட பஸ் நிலையம் தற்போது வரை முழுமையாக செயல்படாத நிலை இருந்து வருகிறது. 17 ஆண்டுகளாக செயல்படாமல் காட்சி பொருளாக இருக்கும் கூடுதல் பஸ் நிலையத்தை சீரமைத்து செயல்பட வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.