/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துாரில் ஆவணித்திருவிழா சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராடல்
/
திருச்செந்துாரில் ஆவணித்திருவிழா சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராடல்
திருச்செந்துாரில் ஆவணித்திருவிழா சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராடல்
திருச்செந்துாரில் ஆவணித்திருவிழா சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராடல்
ADDED : செப் 05, 2024 08:53 PM
திருச்செந்தூர்:திருச்செந்தூரில் ஆவணித்திருவிழாவில் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி அம்மன் மலர்க்கேடய சப்பரத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா 12ம் திருவிழாவான நேற்று மாலை சுவாமி, அம்மனும் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் வீதியுலா வந்து, வடக்குரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் திருவிழா மண்டபம் சேர்ந்தனர். அங்கு வைத்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காம் நடந்தது.
இரவு சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி அம்மன் தனித்தனி மலர்க்கேடய சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.