/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடி மாவட்டத்தில் ஆறு வகையான ஐஸ் கிரீம் விற்க தடை உணவு எண்ணெய் கலப்பு விகிதம் குறிப்பிடாததால் நடவடிக்கை

ADDED : ஜூன் 11, 2024 07:37 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான குழுவினர், பசுவந்தனை சாலையில் “ஹேப் டெய்லி” என்ற பெயரில் ஶ்ரீ உமா ஏஜென்ஸி என்ற நிறுவனம் நடத்திவரும் அருண் ஐஸ் க்ரீம் கடையை திடீரென ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, அருண் ஐஸ் க்ரீமின் கஸாட்டா, ரெக்டாங்க்ங்ல் ஸாண்ட்விச், பட்டர் ஸ்காட்ச் கோன், ப்ளாக் கரண்ட் கோன், டபுள் சாக்கோ கோன், யம்மி பீஸ் ஆகிய ஐஸ் க்ரீம் வகைகளில், பாமாயில், தேங்காய் எண்ணெய் போன்றவை பயன்படுத்திஇருப்பதாக, லேபிளில் குறிப்பட்டிருந்து. ஆனால், அவற்றின் விகிதத்தினை, ஐஸ் க்ரீம்களின் லேபிளில் குறிப்பிடவில்லை.
அந்த ஐஸ் க்ரீம் வகைகளில் பால் கொழுப்பு மற்றும் உணவு எண்ணெய் ஆகியவற்றின் விகிதத்தினைக் குறிப்பிடாமல், நுகர்வோர்களுக்குத் தவறான தகவல் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து, 386 ஐஸ் க்ரீம் கப்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், தவறான ஆவணம் சமர்ப்பித்து உரிமம் பெற்றதிற்காகவும், உரிய ஆவணங்கள் இல்லாத்தானாலும், அக்கடையின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிகமாக இடைக்கால ரத்து செய்து நியமன அலுவலர் மாரியப்பன் உத்தரவு பிறப்பித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
உணவு எண்ணெய் உள்ளீட்டுப் பொருளாகக் கொண்டு, லேபிளில் அதன் விகிதத்தினைக் குறிப்பிடாத மற்ற அனைத்து வகையான அருண் ஐஸ் க்ரீம்களையும் துாத்துக்குடி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் வணிகர்களிடம் இருந்து திரும்ப பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேபிளில் உள்ள தவறை திருத்தும் காலம் வரை, அந்த ஐஸ் க்ரீம் வகைகளை மாவட்டத்தில் விற்பனை செய்ய தடைவிதித்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது. மற்ற நிறுவனத்தின் தயாரிப்புகளையும் ஆய்வு செய்து, இதுபோன்ற ஆணை பிறப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.