/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
இலங்கைக்கு கடத்தமுயன்ற பீடி இலைகள் பறிமுதல்
/
இலங்கைக்கு கடத்தமுயன்ற பீடி இலைகள் பறிமுதல்
ADDED : ஜூலை 10, 2024 09:48 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தமுயன்ற 1.5 டன் பீடி இலை பண்டல்கள் மற்றும் வேனை போலீசார் கைப்பற்றினர்.
துாத்துக்குடி தருவைகுளம் மரைன் போலீசார் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஒரு கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடியது.
அப்பகுதியில் சோதனையிட்டபோது ஒரு வேன் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 1.5 டன் பீடி இலைகள் 40 பண்டல்களில் இருந்தன. வேன் மற்றும் பண்டல்களை மரைன் போலீசார் கைப்பற்றினர்.
போலீசார் விசாரித்தபோது இலங்கைக்கு பீடிஇலைகள் கடத்தும் முயற்சி நடந்தது தெரிந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.