/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
டூவீலர் மீது லாரி மோதியதில் சிறுவன் பலி
/
டூவீலர் மீது லாரி மோதியதில் சிறுவன் பலி
ADDED : ஆக 27, 2024 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே தெற்கு நல்லூரைச் சேர்ந்த கண்ணம்மாள் மகன் சக்திராஜா 14. சுப்பிரமணியன் மகன் அஸ்வின் 13. பள்ளி மாணவர்களான இவர்கள் நேற்று விடுமுறை என்பதால் ஒரே டூவீலரில் குரும்பூர் சென்றனர்.
அப்போது எதிரே வந்த லாரி டூவீலர் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அஸ்வின் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமுற்ற சக்திராஜா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து குரும்பூர் போலீசார் விசாரித்தனர்.