/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மது அருந்திவிட்டு டூ வீலரில் அமர்ந்திருந்தாலும் பிடிப்பீர்களா? கேள்விக்கு பின் கவனிப்பு; அதை தொடர்ந்து மன்னிப்பு: வீடியோ

ADDED : ஆக 06, 2024 12:42 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் நாவிலக்கம்பட்டி சாலையில் உள்ள ஒரு சலுான் கடை முன், சில நாட்களுக்கு முன் சிலர் பொது வழியில் அமர்ந்து மது அருந்தியதாக புகார் எழுந்தது. அங்கு சென்ற எட்டையபுரம் போலீசார், சாலையில் வாகனத்தை நிறுத்தி மது அருந்திக் கொண்டிருந்தவர்களை எச்சரித்தனர்.
மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த டூ வீலரை, 'டாடா ஏஸ்' ஆட்டோவில் காவல் நிலையத்திற்கு கொண்டுச் சென்றனர். அப்போது, அங்கு நின்றிருந்த ஒருவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
'குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டவில்லை; வாகனத்தில் அமர்ந்து தான் இருந்தோம்' என்றார். மேலும், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை மொபைலில் வீடியோவாக பதிவு செய்தார்.
சலுான் கடைக்கு வந்தவரின் டூ வீலரை போலீசார் எடுத்து சென்றதாக அவர் வீடியோவை வெளியிட்டார். பாரதியார் பிறந்த மண்ணில், காவல் துறையினர் இப்படி நடந்து கொள்வதாக அந்த வீடியோவில் பேசிய நபர் தெரிவித்தார்.
இது குறித்து, எட்டையபுரம் போலீசார் விசாரித்தனர். போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அந்த வீடியோவை பதிவேற்றம் செய்தது சென்னையில் காய்கறி கடை வைத்திருக்கும் பொன்ராஜ் என்பது தெரியவந்தது.
எட்டையபுரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு உறவினர்கள், நண்பர்களுடன் சாலையில் அமர்ந்து மது அருந்தி விட்டு, மக்களுக்கு இடையூறாக இருந்து தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் பொன்ராஜ் மற்றும் அவரது உறவினர் அருண் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினர். போலீசாரின் கவனிப்புக்குப் பின், 'நாங்கள் செய்தது தவறு தான், இனிமேல் இதுபோல செய்ய மாட்டோம்' என உறுதி அளித்ததை தொடர்ந்து, அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
அதுமட்டுமின்றி, நடந்த சம்பவத்திற்கு இருவரும் மன்னிப்பு கேட்டு வீடியோவும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், 'மது அருந்திவிட்டு தவறாக நடந்து கொண்டோம், தற்போது சமாதானமாக செல்கிறோம்' என தெரிவித்துள்ளனர்.