/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
வணிகர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் * விக்கிரமராஜா வேண்டுகோள்
/
வணிகர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் * விக்கிரமராஜா வேண்டுகோள்
வணிகர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் * விக்கிரமராஜா வேண்டுகோள்
வணிகர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் * விக்கிரமராஜா வேண்டுகோள்
ADDED : ஜூலை 25, 2024 09:52 PM
குரும்பூர்: சாமானிய வணிகர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் துாத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் குரும்பூரில் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா, புதிய நிர்வாகிகள் பதவி ஏற்புவிழா மற்றும் புதிய வணிகர் சங்கங்கள் பேரமைப்புடன் இணைப்பு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். துாத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கண்ணன் வரவேற்றார். இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா திருவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
தமிழக முதல்வரிடம் சாமானிய வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம். இதே கோரிக்கையை பிரதமர் மோடியிடமும் வலியுறுத்தியுள்ளோம். ஜி.எஸ்.டி. வரியால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதை ஒருமுனை வரியாக மாற்ற வேண்டும். மத்திய அரசின் பட்ஜெட்டில் ஏதாவது நல்ல தீர்வு வரும் என்று எதிர்பார்த்திருந்தோம். அது இல்லை.புகையிலை உற்பத்தியை தடை செய்தால்தான் கடைகளில் புகையிலை பொருட்கள்
கிடைக்காது. ஆனால் கடைகளை சீல் வைப்பது மிக அநீதியானது.
கார்பரேட் கம்பெனிகள் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலமாக சாமானிய வணிர்களை துடைத்தெறியக்கூடும் ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளோம். இதற்காகத்தான் சிறப்பு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கூறுகின்றோம்.
அந்த சட்டத்தில் இதுபோன்ற நிறுவனங்கள் துவங்குவதற்கு மத்திய மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது என்பதைதான் நாங்கள் வலியுறுத்துகின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.