/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சாலையின் தரத்தை தோண்டி பார்த்து ஆய்வு செய்த கலெக்டர்
/
சாலையின் தரத்தை தோண்டி பார்த்து ஆய்வு செய்த கலெக்டர்
சாலையின் தரத்தை தோண்டி பார்த்து ஆய்வு செய்த கலெக்டர்
சாலையின் தரத்தை தோண்டி பார்த்து ஆய்வு செய்த கலெக்டர்
ADDED : ஆக 29, 2024 08:02 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா பகுதியில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகளின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் இளம்பகவத் நேற்று முன்தினமும், நேற்றும் களஆய்வு மேற்கொண்டார்.
கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சேதமடைந்து தற்பொழுது நெடுஞ்சாலைத் துறை மூலம் கட்டப்பட்டு வருவம் ஏரல் பாலத்தை அவர் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, ஆழ்வார்திருநகரி யூனியன் குரங்கணி பஞ்சாயத்தில், ஊரக வளர்ச்சித்துறை மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குரங்கணி புறவழிச்சாலையின் தரம் குறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, சாலையின் ஒரு பகுதியில் சிறிய அளவுக்கு தோண்டி பார்த்து, அதன் தரம், ஆழம், முறையான கலவை உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும், சாலைக்கான ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு சாலை போடப்பட்டுள்ளதா என்பது குறித்து கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யாவிடம் அவர் விபரம் கேட்டறிந்தார்.
மாவடிப்பண்னை அரசு மேல் நிலைப்பள்ளிக்கு சென்ற கலெக்டர், மாணவ - மாணவியருக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் மற்றும் சுவை குறித்து ஆய்வு செய்தார். பணிக்கநாடார் குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதிக்கு சென்ற கலெக்டர் அவர்களுக்கு வழங்கப்படும் உணவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பழையகாயல் பஞ்சாயத்து, புனித மரியன்னை நடுநிலைப் பள்ளிக்கு நேற்று காலை சென்ற கலெக்டர் இளம்பகவத், அங்கு மாணவ, மாணவியருக்கு காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவை அவர்களோடு அமர்ந்து சாப்பிட்ட கலந்துரையாடினார்.

